ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருக்கும் ரஜினியை போல் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலையின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் தனது 169 வது படத்தை நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஜெயிலர் கெட்டப்பில் விநாயகர் சிலை - வெளியான ட்ரெண்டிங் புகைப்படம்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரவபூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருக்கும் ரஜினியை போல் வடிவமைத்திருக்கும் விநாயகர் சிலையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ஜெயிலர் கெட்டப்பில் விநாயகர் சிலை - வெளியான ட்ரெண்டிங் புகைப்படம்.