ஜெய்லர் திரைப்படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்கள் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் சிறப்பு அப்டேட் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதாவது, இன்று ரஜினியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற சிறப்பான அப்டேட்டை அதிகாரவபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் ரஜினியின் பெயர் முத்துவேல் பாண்டியன் எனவும் குறிப்பிட்டுள்ளது.