ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்திருக்கும் கதாபாத்திரம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், தமன்னா உள்ளிட்ட பல மொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்புகளை தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் இப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கும் புதிய நட்சத்திரம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் படப்பிடிப்பில் பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் ஜாக்கி ஷெராப் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழில் பல படங்களில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் இப்படத்திலும் இணைந்திருப்பதால் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.