ஜெய்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் அப்டேட் வெளியாகியுள்ளது.

கோலிவுடில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, சிவராஜ்குமார் உள்ளிட்ட பழமொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சீன்கள் பாடலை வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.