ரஜினியின் ஜெய்லர் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்க இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசை அமைப்பில் உருவாகும் இப்படத்தில் தமன்னா, பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

ஜெயிலர் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு!… ரஜினியுடன் இணைந்த முன்னணி பிரபலம் - யார் தெரியுமா?

இது குறித்த அதிகாரவபூர்வமான தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கப்பட உள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. அப்போ ஸ்டாரில் நடிகர் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் கண்ணாடியுடன் கெத்தாக நின்று கொண்டிருக்கிறார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வந்தனர்.

ஜெயிலர் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு!… ரஜினியுடன் இணைந்த முன்னணி பிரபலம் - யார் தெரியுமா?

இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்து யார் யார் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாள் படப்பிடிப்பில் மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் விநாயகன், ரஜினி மற்றும் யோகி பாபு உடன் இணைந்து நடித்ததாக கூறப்பட்டு வருகின்றது.