ஜெயிலர் படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளது பிரபல முன்னணி நிறுவனம்.

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.

நடிகை தமன்னா உட்பட பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் படக்குழு அதனை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இந்தப் படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்த நிலையில் அவர்களிடமிருந்து கேரள ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளது முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கோகுலம் மூவிஸ் நிறுவனம் வெளியிட ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.