ஜெய்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் நெல்சன் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெய்லர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் இறுதி கட்டம
பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த சுவாரசியமான அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அதன்படி ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜூலை மாதம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த விழாவில் முக்கிய பான் இந்தியா ஸ்டார்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் ஜெய்லர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.