ஜெய்லர் திரைப்படத்தின் தீம் மியூசிக்கை ரசிகர் ஒருவர் பழைய செல்போனில் இசையமைத்து காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், சுனில், மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராப் என பல மொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தீவிரமாக உருவாகி வரும் இப்படத்தின் தீம் மியூசிக்கை படக்குழு சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்ததை தொடர்ந்து தற்போது அந்த மியூசிக்கை ரசிகர் ஒருவர் பழைய நோக்கியா 1100 செல்போனில் இசையமைத்து காட்டி இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அதனை கண்டு ஆச்சரியமடைந்த ரசிகர்கள் அந்த நபரை பாராட்டியதோடு மட்டுமின்றி அந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து ட்ரெண்டிங்காக்கி வருகின்றன.