உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாக 603 திரையரங்குகளில் ஜெயில் திரைப்படம் வெளியாகிறது.

Jail Worldwide Relase From Today : தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகள் உடன் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இன்று வெளியாக உள்ள திரைப்படம் தன் ஜெயில்.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதி நடித்துள்ளார். ரவிவர்மா, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். முதல் பிரதி தயாரிப்பாளராக பிடி செல்வகுமார் படத்தை தயாரித்துள்ளார்.

பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி இன்று ஜெயில் திரைப்படம் உலகம் முழுவதும் 603 திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது.

தமிழகத்தில் இந்த படத்தை எம் எஸ் எம் ஃபிலிம் trader’s நிறுவனத்தின் சார்பாக எம் செண்பக மூர்த்தி என்பவர் வெளியிடுகிறார். இயக்குனர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த படத்தை ஏற்கனவே பார்த்து பாராட்டினார்கள். இதனால் ஜிவி பிரகாஷ் திரைப்பயணத்தில் ஜெயில் முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.