மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ஜெயில் சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jail Scene in Master Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்‌ நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக இருந்து வருகிறது. படம் எப்போது ரிலீஸ் ஆகும்? படத்தின் டிரைலர் எப்போது வெளியிடப்படும் என ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது இப்படத்திலிருந்து புகைப்படம் ஒன்று லீக் ஆகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் உட்பட பலர் கைதி கெட்டப்பில் உள்ளனர். இந்த படத்தின் ஜெயில் காட்சிகள் ஷிமோகாவில் படமாக்கப்பட்டன.

அதிலிருந்து ஒரு காட்சி இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் ஒரு சிறிய கோமியோ ரோலில் நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Lokesh Kanagaraj Look