நடிகர் சூர்யாவின் நோக்கம் இதுதான் என ஜெய்பீம் சர்ச்சைக்கு அப்படத்தில் அல்லியாக நடித்த குழந்தை நட்சத்திரம் ஆவேச வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

JaiBhim Alli Support Video About Controversy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

திருவண்ணாமலையில், 19-ந்தேதி மகாதீப தரிசனம் : பக்தர்களுக்கு அனுமதி?

அதேசமயம் இந்த படத்தில் இடம் பெற்ற காட்சி வன்னியர்களை பின்பற்றும் வகையில் இருப்பதாக சூர்யாவிற்கு பாமகவினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று ஜெயிலில் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி மாற்றப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பாமகவினர் சூர்யாவை தாக்கி பேசி வருகின்றனர்.

Jai Bhim படம் பார்த்தேன்…என்னா படங்க?? – Prabhu Deva Bold Speech..! | Thel Press Meet | Suriya HD

சூர்யாவுக்கு தொடர்ந்து ஆதரவு குவிந்து வரும் நிலையில் ஜெய்பீம் படத்தில் அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சூர்யா அங்கிளின் நோக்கம் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான். அவர் நல்ல உதவி மனப்பான்மை கொண்டவர். பல குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். பலருக்கு உதவி செய்து வருகிறார். அவரை காயப்படுத்தும் வகையில் யாரும் பேசாதீங்க. அவருக்கு ஆதரவு கொடுங்க என பேசியுள்ளார். மேலும் என்னுடைய ஆதரவை என்னுடைய சூர்யா அங்கிளுக்கு தான் என அலி தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.