ஜெய் நடிப்பில் தயாராகி இருக்கும் பெண்ணை துணிகள் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் படம் தான் “எண்ணித் துணிக”. இப்படத்தை எஸ்.கே. வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார்.

இதில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக அத்துல்யா ரவி நடிக்க வில்லனாக வம்சி கிருஷ்ணா நடித்திருக்கிறார். சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ‘என்னடியே என்னடியே’என்ற கார்த்திக் நேத்தா வரிகளில் ஹரிசரண், ஸ்ரீநிஷா ஜெயசீலன் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் நேற்று இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

YouTube video