சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த பட டீச்சரை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளது சூர்யாவின் ஜெய்பீம் பட டீசர்.

Jai Bhim Teaser Beats Annathae Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி அடுத்ததாக ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் அண்ணாத்த. இத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை இரண்டு சிங்கிள் ட்ராக் பாடலும் படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த பட டீசரை பின்னுக்கு தள்ளிய சூர்யா - ரசிகர்கள் ஷாக்
சபரிமலை வருவதை பக்தர்கள் தவிர்க்கவும் : தேவஸ்தானம் வேண்டுகோள்

கடந்த வியாழக்கிழமை வெளியான இந்தப் படத்தின் டீசர் யூட்யூபில் 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படத்தின் டீசர் வெளியானது. பழங்குடி மக்களின் நீதிக்காக போராடும் கதை தான் இந்த திரைப்படம். இந்த படத்தின் டீசரை இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று யூடியூப்பில் சாதனை படைத்து டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த பட டீஸரை பின்னுக்கு தள்ளி சூர்யாவின் படம் சாதனை படைத்திருப்பது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

எங்க Friendship இந்த அளவுக்கு தான்! – கலாய்த்த Rakshan | Kannamma Eannamma Album Launch