பொங்கல் தினத்தில் வலிமை படத்துக்கு போட்டியாக நடிகர் சூர்யா களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Jai Bhim in Premiere Telecast Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் அதனை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

சென்னையில், கனமழையை கணிக்கத் தவறியது ஏன்? : ஆய்வு மையம் விளக்கம்

இது ஒருபுறமிருக்க தற்போது இதே பொங்கல் தினத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ஜெய் பீம் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் டிஆர்பி-ல் எப்படியான சாதனை படைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கல்யாணம் ஆனதை மறைத்த அதிதி மேனன் – ஆதாரத்தை வெளியிட்ட Abi Saravanan..! | Mirana | Vijay Vishwa | HD