ஸ்ரீ அம்மன் மீடியாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் அவரே இயக்கி ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Jai Akash in Amaichar Movie : ஸ்ரீ அம்மன் மீடியாஸ் தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து இயக்கும் புதிய திரைப்படம் “அமைச்சர்”.

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் இயக்கி நடிக்கும் புதிய படம் - டைட்டிலே கெத்தா இருக்கு.!!

இந்தப் படத்தின் கதை என்னவென்றால் கரை வேட்டி கட்டிய அமைச்சரின் கறைபடாத கண்ணியமான காதல் கதை. போலீஸ் பயிற்சி முடித்த ஒரு இளைஞன் அதிர்ஷ்ட வசத்தால் உள்துறை அமைச்சராகிறார். தன் வசத்தில் உள்ள போலீஸ் இலாகாவை பயன்படுத்தி நாட்டில் நடக்கும் கொள்ளை ,கொலை ,கற்பழிப்பு போன்ற குற்றங்களை தடுத்து தமிழ்நாட்டின் முன்மாதிரி அமைச்சராக திகழும் இவர் வாழ்க்கையில் மலரும் கண்ணியமான காதலில் வெற்றி பெற்றாரா? என்பதே கதை.

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் இயக்கி நடிக்கும் புதிய படம் - டைட்டிலே கெத்தா இருக்கு.!!

கதாநாயகனாக ஜெய் ஆகாஷ், கதாநாயகியாக அட்சயா கண்டமுத்தன் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரமேற்று நடிக்கும் விஜயகுமார் ராமகிருஷ்ணா படத்திற்கு பிறகு ஜெய் ஆகாஷுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஐரா, கீகீ , தேவிகா பிர்லா போஸ், ஸ்ரேவன் இவர்களுடன் நகைச்சுவை நட்சத்திரங்களாக ‘கலக்க போவது யாரு’ மைக்கேல் அகஸ்டின், திவாகர் ,‘ஜூனியர் மணிவண்ணன் ஈரோடு பிரபு’, திடியன் ஆகியோர் நடிக்கின்றனர் .

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் இயக்கி நடிக்கும் புதிய படம் - டைட்டிலே கெத்தா இருக்கு.!!

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் , திருத்தணி , சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது .தேனிசை தென்றல் தேவா இசையமைப்பில் மொத்தம் 4 பாடல்கள் இடம்பெறுகிறது. மேலும் 5 சண்டைக்காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகளும் இடம் பெறுகிறது .அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைந்த நிலையில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு வே. இ ராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.