மே 22 செம கொண்டாட்டம் காத்திருப்பதாக ஜகமே தந்திரம் படக்குழு அறிவித்துள்ளது.

Jagame Thanthiram Video Song Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்தத் திரைப்படம் நேரடியாக ஜூன் 18-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் இணையதளம் வழியாக வெளியாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் மூவி பேட்டை படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தை தொடர்ந்து ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

மே 22-ல் காத்திருக்கும் கொண்டாட்டம்.. ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்

இந்த படத்தின் டீஸர் டிரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக ரகிட ரகிட என்ற பாடல் பலரின் காலர் ட்யூனாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வரும் நீ 22ஆம் தேதி இப்படத்தில் இருந்து நேற்று என்ற பாடல் வீடியோ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்களுக்கு நிலைநிறுத்த கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது எனலாம்.