ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ள நிலையில் தனுஷ் செம கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jagame Thanthiram Trailer Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான அசுரன், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன‌. இந்த படங்களை தொடர்ந்து தனுஷ் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வரும் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ்க்கு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நெட்ப்ளிக்ஸ் வழியாக வெளியாவதில் துளியும் விருப்பமில்லை. தயாரிப்பாளருடன் எடுத்துக் கூறியும் அவர் இதனை காதில் வாங்கவில்லை.

நாளை இந்த படத்தின் டிரைலர் கூட வெளியாக உள்ளது. சமீபத்தில் தனுஷ் பாடிய பாடலும் வெளியானது. ஆனால் படக்குழு மீது உள்ள கடுப்பில் தனுஷ் இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. ட்ரெய்லர் வெளியாவது குறித்து பாடல் வெளியானது குறித்து அவர் ஒரு ட்வீட்டை கூட செய்யவில்லை. இந்த படத்திற்கு இன்னும் செய்யும் வேலைகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மட்டுமே ஜகமே தந்திரம் படம் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.