Jagame Thanthiram Release in OTT and Theatre

ஒரே நாளில் தியேட்டர் மற்றும் OTT-ல் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது.

Jagame Thanthiram Release in OTT and Theatre : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சுசிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வெளியாக வெளியாக இருப்பது உறுதியாகி விட்டது.

தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இந்த படத்தை திரையரங்கில் வெளியிட விருப்ப படுகின்றனர், ஆனால் தயாரிப்பாளர் தரப்பு நெட்பிளிக்ஸ் வெளியீட்டுக்கு தேதி குறித்து விட்டது.

இந்த நிலையில் நேற்று தனுஷ் இந்த படத்தை திரையரங்கில் வெளியிடும் ஆசைப்படுவதாக ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு கார்த்திக் சுப்புராஜூம் தன்னுடைய எதிர்பார்ப்பும் அதுதான் என தெரிவித்திருந்தார்.

லண்டனின் சுற்றுலாத் தளங்களை விளம்பரப்படுத்தும் வகையில் உருவாகும் படங்களுக்கு மானியம் வழங்குவது உண்டு. அந்த வகையில் ரூபாய் 75 கோடி பட்ஜெட்டில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு ரூபாய் 16 கோடி வரை மானியம் கிடைக்க உள்ளது.

ஆனால் ஒரு கண்டிசன் திரையரங்குகளில் வெளியானால் மட்டும்தான் இந்த மானியம் கிடைக்கும். தற்போது கொரானா பரவலால் இதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே படக்குழு நெட்ப்ளிக்ஸ் தேர்வு செய்து படத்தை விற்றது.

இனி இந்த ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. நெட்ப்ளிக்ஸ் மூலமாக ஜகமே தந்திரம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும்.

தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஆசைக்கு மதிப்பளிக்கும் வகையில் தயாரிப்பாளர் இந்தியாவில் மட்டும் இதே தினத்தில் திரையரங்குகளில் படத்தை வெளியிடலாம் என முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் OTT மற்றும் தியேட்டர் ரிலீஸ் இரண்டும் ஒரே நாளில் என்பதால் இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எப்படி பெரியார் செய்தார்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.