பேட்ட மற்றும் ஜகமே தந்திரம் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

Jagame Thanthiram Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் வரும் ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் இணையதளம் வழியாக வெளியாக இருக்கிறது.

பேட்ட மற்றும் ஜகமே தந்திரம் படத்திற்கும் இடையே தொடர்பு இருக்கா? சீகரெட்டை உடைத்த கார்த்திக் சுப்புராஜ்.!!

இதற்கான டிரெயிலர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. டிரைலரில் இடம் பெற்றிருந்த தனுஷின் கெட்டப் பேட்டை படத்தில் வரும் ரஜினியின் கெட்டப் போலவே இருப்பதாக பேசப்பட்டது.

இதனால் ஜகமே தந்திரம் மற்றும் பேட்ட 2 படத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் பேட்டை படத்தில் வரும் ரஜினியின் மகன்தான் சுருளி எனவும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

அதாவது பேட்டை மற்றும் ஜகமே தந்திரம் படத்திற்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. இரண்டும் வெவ்வேறு கதை என கூறியுள்ளார்.