ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Jagame Thandiram Trailer Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக கர்ணன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தின் வழியாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வெளியானது ஜகமே தந்திரம் ட்ரைலர்.. வேற லெவலில் கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்

இந்த படத்தின் டிரைலர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதே கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி இருப்பதால் தனுஷ் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.