Jagame Thandhiram First Single Track
Jagame Thandhiram First Single Track

ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

Jagame Thandhiram First Single Track : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்கள்.

ஹீரோவாக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பன்முகத் திறமை கொண்டவர். கோலிவுட் முதல் பாலிவுட் வரை தன்னுடைய தடத்தை பதித்துள்ளார்.

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார். ஊரடங்கும் முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

D43 இசை எப்படி இருக்கும்?? வெயிட் பண்ண முடியல.. இயக்குனரின் பதிவுக்கு ஜிவி பிரகாஷ் கொடுத்த பதில் – என்ன சொல்லிட்டாரு பாருங்க

அதற்குள் இப்படத்தின் அப்படியாவது கொடுங்கள் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

அதாவது ஜூலை 28-ஆம் தேதி இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ரகிட ரகிட என்ற பெயரில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

தனுஷின் பிறந்தநாள் விருந்தாக இந்த சிங்கிள் டிராக் வெளியாக உள்ளது.