Jada Movie Review
அறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் கதிர், யோகி பாபு, ஆடுகளம் கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜடா.

இந்த படம் எப்படி இருக்கு என பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

ஆடுகளம் கிஷோரிடம் கதிரும் அவரது நண்பர்களும் கால்பந்தாட்ட பயிற்சி பெறுகின்றனர். ஒரு கட்டத்தில் செவன்ஸ் போட்டி ஒன்றில் கிஷோரை திட்டமிட்டு கொன்று விடுகின்றனர்.

அவர்களை பழி வாங்க வேண்டும் என 10 வருடம் கழித்து செவன்ஸ் கால்பந்தாட்ட போட்டியில் கதிரும் அவரது நண்பர்கள் கலந்து கொள்கின்றனர். அதன் பின்னர் என்னவானது என்பது தான் இப்படத்தின் கதைக்களம் .

படத்தை பற்றிய அலசல் :

கதிர் அவருடைய கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார். படத்தின் நாயகியான ரோஷினி பிரகாஷ் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார். மற்றபடி படத்தில் அவருக்கு வேலையில்லை.

கோச்சராக நடித்துள்ள கிஷோரின் நடிப்பில் குற்றம் சொல்வதிற்கில்லை. அந்த அளவிற்கு ஒரு எதார்த்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார்.

கிஷோரின் நண்பர்களாக வருபவர்களுக்கும் வசனங்களை கொடுத்து அவர்களிடமும் இயக்குனர் வேலை வாங்கி இருப்பது பாராட்டத்தக்கது.

யோகி பாபுவின் காமெடி சுமார் ரகம் தான். இது காமெடி வேடமா? குணசித்ர வேடமா? என்ற சந்தேகம் எழுகிறது.

தொழில்நுட்பம் :

இசை :

சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை சூப்பர். பாடல்கள் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை.

ஒளிப்பதிவு :

ஏ.ஆர் சூர்யா இந்த படத்தின் ஒளிபதிவிற்காக அதிகம் மென கெட்டுள்ளார் என்பது அவரது காட்சிகளில் நன்றாகவே தெரிகிறது.

இயக்கம் :

ஹாரர், கால்பந்தாட்டம் என இரண்டையும் ஒரே படத்தில் கொடுக்க முயன்றுள்ளார் அறிமுக இயக்குனர் குமரன். இரண்டில் எதையாவது ஒன்றை மட்டும் கையில் எடுத்திருந்தால் நிச்சயம் பெரிய வெற்றியை சுவைத்திருப்பார்.

தம்ப்ஸ் அப் :

  • கதிரின் நடிப்பு
  • கிஷோரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

  • திரைக்கதையில் சொதப்பல்
  • சிரிப்பு வராத காமெடி

மொத்தத்தில் ஜடா ஜஸ்ட் பாஸ் தான்.

REVIEW OVERVIEW
ஜடா விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
jada-movie-reviewமொத்தத்தில் ஜடா ஜஸ்ட் பாஸ் தான்.