Jackson Sanjay in Latest Video

தளபதி விஜய் மகன் சஞ்சயின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Jackson Sanjay in Latest Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தளபதி விஜயின் மகன் ஜாக்சன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா சார்ந்த படிப்பை முடித்துவிட்டு விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார்.

தமிழகம் திரும்பியதும் இவர் திரையுலகில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தளபதி விஜய் மகன் சஞ்சய் வெளிநாட்டில் நடுராத்திரியில் காரில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ ஜாக்சன் சஞ்சய் பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் பக்கத்திலும் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

அதேப்போல் தளபதி விஜய் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.