Jackson Sanjay 1st Movie
Jackson Sanjay 1st Movie

பிரபல நடிகரின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் மகன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Jackson Sanjay 1st Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. வித்தியாச வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஏற்பட காரணம் கோகுல் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படம் தான்.

அடுத்தடுத்த அதிரடிக்கு தயாரான தளபதி? விஜய் 64,65,66 படங்களின் இயக்குனர்கள் இவர்கள் தானா?

இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த குமுதா ஹாப்பி அண்ணாச்சி, friend பீல் ஆயிட்டாப்புல ஆப் சாப்டா கூல் ஆய்டுவாப்புல போன்ற டயலாக்குகள் செம ஹிட் அடித்தன.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. ஆனால் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக தளபதி விஜய்யின் மகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது இது குறித்து விஜயிடம் பேச அவரும் ஓகே சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் விஜயலட்சுமியின் மகன் இப்போ எப்படி இருக்கான் தெரியுமா? வாத்தி கம்மிங் பாட்டுக்கு அவன் ஆடிய ஆட்டத்தை பாருங்க – வீடியோ உள்ளே.!

மேலும் சம்பளம் குறித்து கேட்டதற்கு முதலில் இப்படம் வெளியாகி ஹிட் ஆகட்டும் அதன் பிறகு சம்பளத்தை பற்றி பேசிக் கொள்ளலாம் என விஜய் தரப்பு கூறிவிட்டதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.