Jackpot Movie Review : Jyothika, Revathi, Directed by S Kalyan, Suriya, Kollywood , Tamil Cinema, Latest Cinema Review, Tamil Cinema Review
சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, ஆனந்த் ராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஜாக்பாட்.

Jackpot Movie Review :

படத்தின் கதைக்களம் :

அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரத்தை வைத்து படம் தொடங்குகிறது. ஜோதிகாவும் ரேவதியும் ஒன்றாக சேர்ந்து சில தில்லாங்கடி வேலைகளையும் திருட்டு வேலைகளையம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இப்படியான செயல்பாடுகளால் ஒரு நாள் போலீசில் சிக்கி கொண்டு ஜெயிலுக்கும் செல்கின்றனர். அங்கு ஒரு பாட்டி என் கிட்ட தான் அக்ஷய பாத்திரம் இருக்கு.. ஆனால் அதை நான் ஆனந்த ராஜ் வீட்டில புதைத்து வச்சி இருக்கேன் என கூறுகிறார்.

அதன் பின்னர் ஜோவும் ரேவதியும் அந்த அக்ஷய பாத்திரத்தை எடுத்தார்களா? இல்லையா? இதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது தான் ஆக்ஷன் திரில்லர் கலந்த இப்படத்தின் கதைக்களம்.

ஆசிரியையாக ஜெயித்தாரா ஜோதிகா? – ராட்சசி விமர்சனம்.!

படத்தை பற்றிய அலசல் :

முதல் முறையாக ஜோதிகா ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். சும்மா சொல்ல கூடாது ஆக்ஷனிலும் நான் கிங் என நிரூபித்து விட்டார்.

நடிகை ரேவதியும் நடிப்பு வயசெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என அவரும் ஆக்ஷனில் அதிரடி கிளப்பியுள்ளார். ஜோ – ரே கூட்டணி ஜோராவே கை கொடுத்துள்ளது.

ஆனந்த ராஜ் வில்லன் மற்றும் பெண் வேடம் என இரு வேடத்தில் நடித்துள்ளார். வில்லன் ரோல் பெரிய அளவில் மிரட்டலாக இல்லை என்றாலும் பெண் வேடம் சூப்பராக பொருந்தியுள்ளது.

மேலும் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், டைகர் தங்கதுரை ஆகியோரின் காமெடி 100% சிரிப்புக்கு கேரண்டி கொடுக்கிறது.

YouTube video

தொழில்நுட்பம் :

இசை :

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசை பிரமாதம். ஆனால் பாடல்கள் சுமார் ரகம் தான்.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

ஆர்.எஸ் ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவில் குறை சொல்வதற்கு இல்லை. விஜய் வேலு குட்டியின் எடிட்டிங் கச்சிதம்.

இயக்கம் :

காமெடி, ஆக்ஷன், திரில்லர் படம் என்பதால் இயக்குனர் கதையில் அழுத்தம் கொடுக்காமல் கதாபாத்திரங்களில் அழுத்தம் கொடுத்து மக்களை ரசிக்க வைத்துள்ளார். வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. ஜோதிகா, ரேவதியின் நடிப்பு
2. டைகர் தங்கதுரை, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரனின் காமெடி
3. ஆனந்த ராஜின் பெண் வேடம்
4. ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. காமெடி கலந்த படம் என்பதால் கதையில் அழுத்தம் இல்லை

 

YouTube video

REVIEW OVERVIEW
ஜாக்பாட் விமர்சனம்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.
jackpot-movie-reviewமொத்தத்தில் ஜாக்பாட் குடும்பத்துடன் சேர்ந்து நடித்து சிரித்து மகிழ ஏற்ற படம்.