Jackie Shroff ROle

Jackie Shroff Role : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது. என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் வில்லன் ஜாக்கி ஷெராப்பின் ரோல் என்னவென்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்திய கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவராக ஜாக்கி ஷெராப் நடித்துள்ளாராம்.

இவரை எதிர்த்து சண்டை போடுவது போன்ற காட்சிகள் படத்தில் இல்லை என்றாலும் இவருக்கும் விஜய்க்குமான காட்சிகளில் திரையில் அனல் பறக்குமாம்.

நடிகர் ஜாக்கி ஷெராப் ஏற்கனவே ஆரண்ய காண்டம், மாயவன், கோச்சடையான் போன்ற படங்களில் தமிழில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.