Jackfruit Gravy Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Jackfruit Gravy Recipe :

தேவையான பொருட்கள்:

பலாக்காய் – 1 கப்,
வெங்காயம் – 2,
பூண்டு – 6-7 பற்கள்,
பச்சை மிளகாய் – 2,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
மல்லி தூள் – 1 டீஸ்பூன் ,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
கடுகு – சிறிதளவு,
பிரியாணி இலை – 1,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

1) முதலில் பலாக்காயை நன்கு கழுவி, 1 இன்ச் துண்டுகளாக நறுக்கி வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

மந்தாரை கீரையில் பொதிந்து கிடக்கும் மகத்துவங்களை தெரிந்து கொள்வோமா ?

2) பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, கடுகு சேர்த்து தாளித்து, வெங்காயத்தை வதக்கி, பின் அத்துடன் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

3) அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள பலாக்காயை போட்டு, நன்கு கொதிக்க விட வேண்டும்.

4) இறுதியில் கரம் மசாலா சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான பலாக்காய் கிரேவி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here