வாரிசு திரைப்படத்தை குடும்பத்துடன் கண்டு களித்த ஜெ. கருணாநிதி MLA அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவின் மூலம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த 11ஆம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் சில இடங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

வாரிசு படத்தை பாராட்டி தள்ளிய MLA!!… வைரலாகும் ட்விட்டர் பதிவு இதோ.!

வம்சி இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் யோகி பாபு, பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் பற்றின விமர்சனங்கள் இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில் வாரிசு படத்தை குடும்பத்துடன் கண்டு களித்து பாராட்டி பதிவிட்டிருக்கும் ஜெ. கருணாநிதி MLA அவர்களின் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாரிசு படத்தை பாராட்டி தள்ளிய MLA!!… வைரலாகும் ட்விட்டர் பதிவு இதோ.!

அதில் அவர், இளைய தளபதி விஜய் அவர்களின் படங்களை வெளியான முதல் நாளே பார்த்து விடுவேன். வாரிசு குடும்ப கதையாக வெளியானதால் குடும்பத்துடன் பார்க்க விரும்பி சில நாட்கள் கடந்து பார்த்தேன். குடும்பம் கொண்டாட அற்புத படைப்பை தந்து தனித்துவம் காட்டி நடித்துள்ள விஜய் அவர்களுக்கு பாராட்டுக்கள். என்று பதிவிட்டு இருக்கிறார். இவரது பாராட்டிற்கு நன்றி தெரிவித்து வரும் விஜய் ரசிகர்கள் இப்பதிவினை வைரலாக்கியும் வருகின்றனர்.