அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் விதமாக காமெடி நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Iyappan Gopi Passes Away : கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை ஆட்டிப் படைத்து வருகிறது. கொரோனா வின் முதல் அலையை விட இரண்டாவது அலை மிகவும் கோரமாக இருக்கிறது.

சாதாரண பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு நடிகர் யாவது நாம் பலிகொடுத்து வருகிறோம்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. காமெடி நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பால் மரணம்

இயக்குனர் தாமிரா, நெல்லை சிவா, குட்டி ரமேஷ், மாறன் இந்த வருடத்தில் மரணம் அடைந்த திரையுலகப் பிரபலங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தற்போது காமெடி நடிகரானார் ஐயப்பன் கோபி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.