IEMI Review

IEMI Tamil Review :

ஆர். முகேஷ் இயக்கத்தில் நடிகை சார்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் ஆகியோர் இணைந்து தயாரித்து வெளியாகியுள்ள படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’.

விமல் நாயகனாக நடிக்க ஆஷ்னா சவேரி கவர்ச்சியான நாயகியாக நடித்துள்ளார். மேலும் சன்னி லியோனின் உறவு முறை தங்கையான மியா ராய் லியோனும் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சிங்கம் புலி, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான், பூர்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கதைக்களம் :

விமலும் சிங்கம் புலியும் பகலில் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகின்றனர், இரவில் ஆளில்லா வீடுகளில் திருட்டு வேலை செய்யும் நபர்களாவும் இருந்து வருகின்றனர்.

அப்படி ஒரு நாள் திருடும் போது இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கிறது, இது ஒரு புறம் இருக்க பிளே பாயான விமல் வெளிநாட்டில் வேலை செய்து வரும் போது மியா ராயை பார்த்து விசில் அடிக்க அந்த அம்மணி விமலை கூட்டி சென்று தொடர்ந்து தன்னுடைய காமவெறியை தீர்த்து கொள்கிறார்.

மியா ராயின் தொல்லை தாங்காமல் சொந்த ஊருவுக்கு வந்து நாயகியான ஆஷ்னா சவேரியை காதலிக்கிறார், நாயகியின் குடும்பதாயிரடமும் சிக்கி கொள்கிறார். வீடுகளில் திருடிய போது ஆனந்த் ராஜ் விற்பனை செய்து வரும் வயகரா மருந்தை தெரியாமல் திருடி விடுகிறார்.

அதன் பின்னர் இந்த மூவரும் சேர்ந்து விமலையும் சிங்கம் புலியையும் தேட ஆரம்பிக்கின்றனர், இவர்களிடம் இருந்து இருவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

விமல், ஆஷ்னா சவேரி, மியா ராஜ் :

விமல் வழக்கம் போல இப்படத்திலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார். அதேபோல் ஆஷ்னா சவேரி, மியா ராஜ் ஆகியோரும் தங்களுடைய பங்கை முழுமையாக நடித்து கொடுத்துள்ளனர்.

மற்ற நடிகர் நடிகைகள் :

படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகைகளான சிங்கம் புலி, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான், பூர்ணா ஆகியோர் தங்களுடைய வேலைகளை ஒழுங்காக முடித்து கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

நடராஜன் சங்கரனின் இசை படத்திற்கு கசித்தமாக பொருந்தியுள்ளது. ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவைகளும் அருமையாக அமைந்துள்ளன.

இயக்குனர் :

இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். அடல்ட் காமெடி படம் என்பதால் படம் முழுவதும் கவர்ச்சி, காமெடி என கலகலப்பாக கொண்டு சென்றுள்ளார். ஆபாச வார்த்தைகளை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

தம்ப்ஸ் அப் :

1. விமலின் நடிப்பு
2. சிங்கம் புலியின் காமெடி

தம்ப்ஸ் டவுன் :

1. ஆபாச காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம்
2. கதைக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம்.

REVIEW OVERVIEW
இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
ivanuku-engayo-macham-irukku-tamil-reviewமொத்தத்தில் இப்படம் இளைஞர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக இருக்கும்.