Bigil IT Raid
AGS நிறுவனங்களில் IT ரைடு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளம்பியுள்ளன.

IT Raid in AGS Entertainment : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தை AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

உலகம் முழுவதும் இப்படம் ரூ 300 கோடிக்கும் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. கோலிவுட் சினிமாவிலேயே கடந்த வருடம் அதிக வசூல் கொடுத்த திரைப்படம் பிகில் தான் எனவும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் பலமுறை அழுத்தம் திருத்தமாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் AGS நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் என கிட்டத்தட்ட 20 இடங்களில் IT ரைடு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆய்வின் முடிவில் ஆதாரங்கள் எதாவது சிக்குகின்றனவா? இல்லையா? என்பது குறித்த விவரங்கள் எல்லாம் இன்று மாலை தான் தெரிய வரும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.