Vijay Raid
AGS எண்டெர்டைன்மென்ட் நிறுவனத்தில் IT ரைடு நடந்து வரும் நிலையில் விஜயிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயை வைத்து அட்லீ இயக்கி இருந்த திரைப்படம் பிகில். இந்த படத்தை AGS எண்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்தார்.

படமும் பெரிய அளவிற்கு லாபம் கொடுத்ததாக படக்குழுவினர் கூறி வந்த நிலையில் இன்று AGS நிறுவனம் உட்பட 20 இடங்களில் IT ரைடு நடந்து வருகிறது.

இந்த IT ரைடின் எதிரொலியாக நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள தளபதி விஜயிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தளபதி விஜய் பிகில் படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார், என்பது பற்றிய விசாரணை தான் இது என கூறப்படுகிறது.

AGS அலுவலங்களை தொடர்ந்து விஜயின் நீலாங்கரை வீட்டிலும் IT ரைடு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.