கோவில் திரைப்படம் பெரும் ஹிட்டாகி இன்றுவரை சிம்பு ஹரியுடன் இனி அதற்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Issue With Hari and Simbu : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. டி ராஜேந்தர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து தற்போது ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

ஜாடைமாடையாக திட்டிய இயக்குனர்.. படம் ஹிட்டாகியும் இன்றுவரை மீண்டும் இணையாத சிம்பு - பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்

அதாவது கோவில் படத்தின் சூட்டிங்கிற்கு சிம்பு எப்போதும் லேட்டாகத்தான் வருவார். ஆனால் இயக்குனர் ஹரி எப்போதும் சொன்ன நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். சிம்பு லேட்டாக வருவதால் அவர் கோபம் அடைந்துள்ளார். ஒரு நாள் சிவனுக்கு எதிரில் உதவி இயக்குனர்களை திட்டுவது போல ஜாடை மாடையாக சிம்புவை திட்டியுள்ளார். பணத்த வாங்கிட்டு தானே படத்தில் வேலை பண்றீங்க சரியான நேரத்துக்கு சூட்டிங் வர முடியாதா என ஹரி கோபப்பட்டு உள்ளார்.

ஜாடைமாடையாக திட்டிய இயக்குனர்.. படம் ஹிட்டாகியும் இன்றுவரை மீண்டும் இணையாத சிம்பு - பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்

இயக்குனர் ஹரி ஜாடைமாடையாக தன்னைத்தான் திட்டுகிறார் என்பதை புரிந்து கொண்ட சிம்பு கோவில் திரைப்படம் வெற்றி பெற்ற பின்னரும் இதுவரை அவரோடு இணையவில்லை என பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் இந்த காரணத்திற்காகத் தான் இவர்களின் கூட்டணி மீண்டும் அமையவில்லையா என்பது இவர்கள் இருவருக்கு தான் தெரியும்.