Issue in Master Release

மாஸ்டர் பட ரிலீஸில் தயாரிப்பாளருக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

Issue in Master Release : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் முதல் திரைப்படம் வெளியாக உள்ளது.

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். பொங்கல் விருந்தாக இப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.

ஆனாலும் திரையரங்குகளில் 100 சதவீத சீட்டை நிரப்ப அனுமதி கிடைத்தால் மட்டுமே மாஸ்டர் திரை படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கும். இதனால் தயாரிப்பு நிறுவனம் அரசின் அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் பிரிட்டோ வேளச்சேரியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் எல்கேஜி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பெடுக்க ரூபாய் 67 ஆயிரம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 90 ஆயிரம் கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என பெற்றோர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது. இதன்காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ்க்கு சிக்கல் ஏற்படலாம் என கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.