பீஸ்ட் படத்தின் வசூலுக்கு புதிய பிரச்சினையை எழுந்திருப்பது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Issue for Beast Movie Release in Telungu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது தயாரிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். யோகி பாபு உட்பட பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

பீஸ்ட் படத்தின் வசூலுக்கு வந்த செக்.. வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த படத்தில் வரும் 2022 பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழைப்போலவே தெலுங்கிலும் தளபதி விஜய்க்கு கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட் உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு முன்னதாக வெளியான பிகில், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருந்தன.

ஒலிம்பிக் டுடே : பதக்கப்பட்டியலில், அமெரிக்கா மீண்டும் முதலிடம்..இந்தியா.?

இந்த படங்களை தொடர்ந்து வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் தெலுங்குவில் ரூபாய் 50 கோடி வசூல் செய்ய வேண்டும் என டார்கெட் வைத்துள்ளார் தளபதி விஜய். ஆனால் இந்த திட்டம் நிறைவேறுவதில் சிக்கல் உருவாக்கியுள்ளது.

ஆரம்ப காலத்தில் ஹோட்டலில் Bathroom கழுவினேன்! – MR World பட்டம் வென்ற Manikandan Emotional Speech

தமிழில் எப்படி பொங்கல் கொண்டாடப்படுகிறது அதேபோல் ஜனவரி 14-ஆம் தேதி தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சங்கராந்தி என்ற திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இதன் காரணமாக பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பட்டா, பவன் கல்யாண் நடிக்கும் அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் ஆகிய திரைப்படங்கள் ஜனவரி 14ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விஜய் படத்திற்கு தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

இதனால் விஜய் திட்டமிட்டபடி 50 கோடிக்குமேல் தெலுங்குவில் வசூல் செய்வது என்பது கடினமான ஒன்றாக உள்ளது.