Israel Vs Iran
Israel Vs Iran

Israel Vs Iran  : இஸ்ரேலுடன் நல்லுறவு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம் அதனால் மிகப்பெரிய கடுமையான பின் விளைவை சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஈரான் ராணுவம் தனது வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

இஸ்ரேல் உடன் ஐக்கிய அமீரகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது அவமானகரமானது ஆகும். ஈரானின் அந்தச் செயலால் மேற்கு ஆசிய அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரிக்கும். மேலும் ஐக்கிய அரபு அமீரகமும் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானா சனிக்கிழமை தொலைக்காட்சியில் இஸ்ரேலுடன் நல்லுறவு ஒப்பந்தம் மேற்கொண்டு ஐக்கிய மாபெரும் தவறு இழைத்த குற்றம் சாட்டியுள்ளார்.

செகண்ட் இன்னிங்சை ஆரம்பம்! வனிதா VS லஷ்மி ராமகிருஷ்ணன்

ஏனென்றால் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே தூதரக நல்லுறவு ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது.

மூன்று நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தத்தின் ஆக்கிரமிக்கப் மேற்கு கரை தங்களுடன் இணைக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தி உள்ள முதல் வளைகுடா நாடாகவும் மூன்றாவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகி உள்ளது.

இதற்கு துருக்கி ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன எனினும் பாலஸ்தீன் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்த ஒப்பந்தம் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவும் ஐக்கிய அரபு அமீரகம் கூறிவந்துள்ளது.

இந்த ஒப்பந்த ஐநாவும் சீனா உள்ளிட்ட நாடுகளும் வரவேற்பைத் தெரிவித்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.