Ispade Rajavum Idhaya Raniyum

Ispade Rajavum Idhaya Raniyum : சிவகார்த்திகேயன் படங்களுக்கு இணையாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். தற்போது பல பெண்களின் மனதில் கனவு கண்ணனாகவும் இளைஞர்களின் பேவரைட் நடிகராகவும் இடம் பிடித்து விட்டார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த ஹரிஷ் கல்யாண் பியார் பிரேம காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட்டார்.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடித்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு சாதனைகளையும் படைத்திருந்தது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

மேலும் இப்படமும் குடும்பத்துடன் பார்த்து ரசித்து கொண்டாட கூடிய படமாக உருவாகி இருப்பதால் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்களுக்கு இணையான அளவில் கிட்டத்தட்ட 600 தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளது. .

குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே 400 தியேட்டர்களிலும் கேரளா மற்றும் கர்நாடகாவில் 100 தியேட்டர்களிலும் ஓவர்சீஸ் நாடுகளிலும் 100 தியேட்டர்கள் என மொத்தம் 600 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இன்னும் பல தியேட்டர் உரிமையாளர்களும் இந்த படத்தை திரையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இப்படம் ஹரிஷ் கல்யாண் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு இணையான இடத்தை அதி விரைவில் ஹரிஷ் கல்யாண் பிடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.