ISL Football: Chennai vs Mumbai
ISL Football: Chennai vs Mumbai

ISL Football: Chennai vs Mumbai – ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி மும்பையில் இன்று நடப்பு சாம்பியன் சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது.

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் 10 அணிகளுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து இன்று இரவு சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளது.

இதுவரை பெரிதாக வெற்றியை பெறாத சென்னை அணி அடுத்ததாக விளையாட இருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து போட்டியில் இருக்க முடியும்.

சென்னை அணி இது வரை 10 போட்டிகளை விளையாடி உள்ளது. அதில், 1 வெற்றி, 2 டிரா மற்றும் 7 தோல்வி அடைந்துள்ளது.

இதற்கு நேர்மாறாக உள்ளது மும்பை அணி இது வரை 5 வெற்றி, 2 டிரா மற்றும் 2 தோல்வி என சிறந்த நிலையில் உள்ளது மும்பை அணி.

மேலும், கடந்த 5 போட்டிகளில் மும்பை அணி வெற்றி மட்டுமே பெற்றது குறிப்பிடதக்கது. எனவே,மும்பை அணி இன்று இரவு 7.30-க்கு சொந்த மண்ணில் நடக்க இருக்கும் போட்டியில் வெற்றி பெற பெரிதும் முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நேற்றிய ஆட்டத்தில் கவுகாத்தி மற்றும் பெங்களூரு அணிகள் மோதினர். இதில் கவுகாத்தி வெற்றி என நினைத்த நேரத்தில், ஆட்டத்தின் கடைசி நிமிடதில் பெங்களூரு அணி வீரர் சென்சோ ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமன் செய்யப்பட்டது.

இதனால், பெங்களூரு அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.