ISL Football Bangalore team win
ISL Football Bangalore team win

ISL Football Bangalore team win – ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் கடைசி நேரத்தில் பெங்களூரு அணி வெற்றி.

இந்தியன் சூப்பர் லீக் கால் பந்து போட்டியில் 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, டெல்லி அணிகள் மோதினர்.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் 0-0 என்ற கணிக்கில் இருந்தன. போட்டி சமனில் முடியும் என்று எதிர்ப் பார்க்கப்பட்டது.

ஆனால், ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பெங்களூரு அணி ஆட்டத்தில் எழுச்சி தெரிந்தது.

போட்டியின் 87-வது நிமிடதில் பெங்களூரு அணியின் வீரர் உதாண்டா சிங் கோல் அடித்து கணக்கை தொடங்கினார். மேலும் ஆட்டதின் முடிவு வரை தனது கணக்கை தொடங்காமல் இருந்தது டெல்லி அணி.

இறுதியில் பெங்களூரு அணி 1-0 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வெற்றி பெற்றது.

மற்றும் பெங்களூரு அணி 6 வெற்றி, ஒரு டிரா என 19 புள்ளிகள் பெற்று தர வரிசையில் முதல் இடதில் உள்ளது.