Ishwarya Menon in Thendral Serial

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன் தென்றல் சீரியலில் நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுளளது.

Ishwarya Menon in Thendral Serial : தமிழ் சினிமாவில் இன்று நடிகைகளாக நடிகர்களாக இருக்கும் பலர் சீரியல்களில் நடித்துள்ளனர். ஆனால் அவை எல்லாம் பல வருடங்களுக்கு பிறகு தான் நமக்கு தெரியவருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன் சீரியல் ஒன்றில் நடித்து உள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் லவ் ஃபெயிலியர், ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு முகத்தை மாற்றிக் கொண்டதாக சமீபத்தில் பேசப்பட்டு வந்தது. தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக இவருடைய பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் சுருதி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு முன்பாக இந்த சீரியலில் நடித்துள்ளார் என்பது தற்போது வெளியாகி உள்ள புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இதோ பாருங்க