நாய்க்குத் கூட ஜாதி பெயரை வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல தமிழ் நடிகை.

Ishwarya Menon in Dog Name : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழில் வெளிவந்த தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

நாய்க்கு கூட ஜாதி பெயரை வைத்த பிரபல தமிழ் நடிகை - வச்சு செய்யும் ரசிகர்கள்

தமிழகத்தில் பெயருக்கு பின்னால் ஜாதியை சேர்த்து கொள்ளும் பழக்கம் அழிந்து வரும் நிலையில் கேரளாவில் இருந்து வரும் நடிகைகள் தங்களது பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சமீபத்தில்தான் ஜனனி ஐயர் தன்னுடைய பெயரில் இருந்து ஐயர் என்ற ஜாதி பெயரை நீக்கினார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தன. இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா மேனன் தான் வளர்த்து வரும் நாய் குட்டிக்கு காபி மேனன் என பெயர் வைத்துள்ளார்.

நாயின் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை வைத்துள்ள ஐஸ்வர்யா மேனன் இந்த செயலை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.