பிரபல நடிகையாக திகழும் ஐஸ்வர்யா தத்தா தனது instagram பக்கத்தில் கவர்ச்சி உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் கல்கத்தாவை சேர்ந்தவர். இருப்பினும் தமிழ் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் தமிழில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். இவரின் முதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமான இவர் இதனை தொடர்ந்து பாயும் புலி, ஆறாது சினம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

புதிய கவர்ச்சி உடையில் தாறுமாறாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா தத்தா.

இதையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ்2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் ஐஸ்வர்யா தத்தாவின் துணிச்சலான பேச்சும் நடவடிக்கைகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் ஒரு சில படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

புதிய கவர்ச்சி உடையில் தாறுமாறாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா தத்தா.

இருப்பினும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் மாடலிங்கான போட்டோக்களை வெளியிட்டு வருவார். அதேபோல் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே அதிக லைக்ஸ் களை பெற்றது மட்டுமின்றி அவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.