வாரிசு படத்தில் ராஸ்மிகா மந்தனாவுக்கு டப்பிங் பேசியது யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழில் கார்த்திக் ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்ததை தொடர்ந்து முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது இந்த படத்தில் ராஷ்மிகாவுக்கு டப்பிங் பேசியது யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. அவர் வேறு யாருமில்லை பிரபல நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் தான் என தெரியவந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.