முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் நிதி அளித்து உள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.

Ishari Ganesh Donates to CM Fund : முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் நிதி அளித்து உள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் நிதி அளித்த பிரபல தயாரிப்பாளர்

தமிழகத்திலும் பாதிப்பு உச்சத்தை அடைந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் தாராளமாக நிதி அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மக்கள், திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் நிதி அளித்து வந்தனர். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் அவருடைய குடும்பத்தாருடன் முதல்வரை சந்தித்து ரூபாய் ஒரு கோடியே ஒரு லட்சம் நிவாரண நிதி வழங்கி உள்ளார்.