மூஞ்சிக்கு நேராக ஆட்டிட்டு மன்னிப்பு கேட்டா என்ன அர்த்தம் என இமான் அண்ணாச்சியுடன் சண்டையிட்டு உள்ளார் இசைவாணி.

Isai Vani Fight With Imman Annachi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நாற்பத்தி ஐந்தாவது நாள் எபிசோட் நேற்று ஒளிபரப்பானது. ஏற்கனவே இமான் அண்ணாச்சி மற்றும் இசைவாணி இடையே தொடர்ந்து மோதல் போக்கை இருந்து வந்த நிலையில் நேற்று அது உச்சத்தை எட்டியுள்ளது.

‘புதிய கோச்சர்’ டிராவிட், இந்திய அணியை மேலும் பலப்படுத்துவாரா? : காம்பீர் விளக்கம்

அதாவது இமான் அண்ணாச்சி தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்த இசைவாணியிடம் காரணத்தை கேட்க அவர் தன்னுடைய முகத்துக்கு நேராக காலை ஆட்டியது பிடிக்கவில்லை என கூறியதற்கு அவர் விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டார். ஆனால் இசையோ காலை அகட்டி காட்டிட்டு மன்னிப்பு கேட்டால் என்ன அர்த்தம் என விடாப்பிடியாக இருந்தார்.

Jai Bhim Issue: 5 கோடி வரை இழப்பீடு கொடுக்க வேண்டும் – பா.ம.க.வழக்கறிஞர் பாலு ஆவேசம்.! | Suriya | HD

அதற்கு அடுத்ததாக ஐக்கியும் இசை வாங்கி சமாதனம் செய்ய இதுவே உங்களுக்கு நடந்தா நீங்க என்ன செய்வீங்க என கேட்க நான் பெரிதாக எடுத்துக்க மாட்டேன் என அவர் கூறினார். ஆனால் நான் அப்படி இல்லை எனக்கு பிடிக்காது என இசைவாணி கூறினார். அதன் பிறகு மீண்டும் இமான் அண்ணாச்சி மன்னிப்பு கேட்டார்.

பிறகுதான் இசை மன்னிப்பெல்லாம் வேண்டாம் விடுங்க அண்ணாச்சி என கூறினார். இந்த சம்பவத்தால் பிக்பாஸ் வீடு பரபரப்பானது. அதேபோல் இன்று இசைவாணி மற்றும் தாமரைச்செல்வி கடும் மோதல் இருப்பது ப்ரோமோ வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.