Is the Sun TV serial coming to an end Fans in grief
Is the Sun TV serial coming to an end Fans in grief

வானத்தைப்போல சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. இந்த சீரியலுக்காக தனி ரசிகர்களே இருக்கிறார்கள் என்று சொல்லலாம். நான்கு வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தங்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. டிஆர்பி யிலும் இந்த சீரியல் நல்ல நிலையில் தொடர்ந்து இருந்தது.

Is the Sun TV serial coming to an end Fans in grief
Is the Sun TV serial coming to an end Fans in grief

ஆனால் ஒரே மாதிரியான கதை களத்துடன் நகர்வதால் சிறிது சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளது இந்த சீரியல். குறிப்பாக டிஆர்பியிலும் அடி வாங்க தொடங்கியது.

இதனால் இந்த சீரியல் முடிவுக்கு வரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் வானத்தைப்போல ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக இந்த தொடரை முடித்து இதற்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த சுவாதி நடிக்கப் போகும் புதிய சீரியலான மூன்று முடிச்சு சீரியல் ஒளிபரப்பாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.