இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Irutu Araiyil Murattu Kuthu2 Title : தமிழ் சினிமாவில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, சந்திரிக்கா ரவி என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

அடல்ட் காமெடி படமாக வெளியாகி இருந்த இப்படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரி குவித்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த யாருமே நடிக்கவில்லை.

ஹீரோவாக இப்படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி விஜயகுமாரே நடித்துள்ளார். நாயகியாக ஷாலு ஷம்மு நடித்துள்ளார்.

வெகு விரைவில் இந்த படமும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நாகர்ஜுனா நடித்த தமிழ் படம்.. இந்த படத்துக்கும் தளபதி விஜய்க்கும் இடையே இப்படி ஒரு தொடர்பா??

அதாவது இப்படத்திற்கு இரண்டாம் குத்து என டைட்டில் வைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

முதல் பாகம் டபுள் மீனிங், கவர்ச்சியான காட்சிகள் என படம் முழுவதும் இடம் பெற்றிருந்ததால் இந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.