Iruttu Kadai Halwa Owner Suicide
Iruttu Kadai Halwa Owner Suicide

கொரானா உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நல்ல இருட்டு கடை அல்வா உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Iruttu Kadai Halwa Owner Suicide : தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென 70 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

அதே சமயம் கொரோனாவுக்கு பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்த வைரஸ் தாக்கத்தின் கோரப்பிடியில் இருந்து முற்றிலுமாக குணமாகி வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது.

இருப்பினும் கொரோனா தொற்று உறுதியானதும் ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

மதுமிதா இவ்வளவு மோசமாக கையை அறுத்து கொண்டாரா? முதல் முறையாக வெளியான ஷாக்கிங் புகைப்படம்.!

இந்த நிலையில் தற்போது மிகவும் பிரபலமான இருட்டு கடை அல்வா உரிமையாளர் ஹரி சிங் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் திடீரென மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவருடைய மறைவு திருநெல்வேலியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.