Vijay Vs Simbu
விஜய்க்கு போட்டியாக இன்று மாலை சிம்புவும் பாடல் ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Thalapathy Vijay Vs Simbu : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கதை என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

தற்போது இந்த பாடலுக்கு போட்டியாக சிம்பு இரும்பு மனிதன் என்ற படத்தில் பாடியுள்ள டோன்ட் வரி புள்ளிங்கோ என்ற பாடலும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இன்று மாலை விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.