Irumbu Manithan Movie Review
டிஸ்னி இயக்கத்தில் ஜோசப் பேபி தயாரிப்பில் உருவாகி திரைக்கு வந்துள்ள திரைப்படம் இரும்பு மனிதன். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Irumbu Manithan Movie Review : 

படத்தின் கதைக்களம் :

ஓட்டல் தொழில் மீதும் சமையல் மீதும் அதிகம் ஆர்வம் கொண்ட சந்தோஷ் பிரதாப் ஒரு சிறிய ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு இரண்டு அனாதை பிள்ளைகளையும் தத்தெடுத்து வளர்க்கிறார்.

திருட வரும் கஞ்சா கருப்புக்கும் தன்னுடைய ஓட்டலில் வேலை போட்டு கொடுத்து கூடவே வைத்து கொள்கிறார். மேலும் மனநலம் பாதித்த பெண்ணுக்கு பிறந்து அனாதையான இன்னொரு குழந்தையும் மீட்டெடுத்து மூன்று பிள்ளைகளை தன்னுடைய மகன்கள் போலவே வளர்க்கிறார்.

சத்தியமா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க.. வலிமை வில்லன் இவர் தான் – ஷாக்கிங் அப்டேட்.!

தனக்கு திருமணமானால் எங்கு பிள்ளையை பிரிந்து விடுவோமோ என்ற அச்சத்தாலே தன்னை துரத்தி துரத்தி காதலிக்கும் அர்ச்சனாவை நிராகரித்து விடுகிறார்.

இப்படியே மகன்களுக்காக வாழும் சந்தோஷ் பிரதாப் ஒரு கட்டத்தில் உப்பள ஓட்டல்களுக்கு அதிபதியாகிறார். வயது முதிர்ந்த காலத்தில் இவர்களின் மூன்று மகன்களும் இவரை ஏமாற்றி சொத்தை பிடுங்கி கொண்டு நடுத்தெருவில் விட்டு விடுகின்றனர்.

அதன் பின்னர் சந்தோஷ் பிரதாப் என்னவானார்? என்ன செய்தார் என்பதே இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

சந்தோஷ் பிரதாப் சுறுசுறுப்பான இளைஞராக நம்மை கவர்வது மட்டுமில்லாமல் முதுமை வேடத்தில் பொறுமையாகவும் கையாண்டு கலக்கியுள்ளார். படத்தின் கதையை தன் மீது சுமந்து கொண்டுள்ளார்.

அர்ச்சனா சந்தோஷை துரத்தி காதலிப்பது அழகு, ஆனால் சட்டெனெ மனநிலையை மாற்றி கொண்டது நம்ப முடியவில்லை.

தொழில்நுட்பம் :

இசை :

கே.எஸ் மனோஜின் இசை ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவு :

கே கோகுலின் ஒளிப்பதிவு அற்புதம்.

எடிட்டிங் :

எஸ்.பி அகமதுவின் எடிட்டிங் விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளது.

இயக்கம் :

டிஸ்னி வித்தியாசமான கதையை கையில் எடுத்து நல்ல திரைக்கதையோடு கொண்டு சென்று படத்திற்கு மெருகேற்றியுள்ளார்.

மொத்தத்தில் இரும்பு மனிதன் வலிமையான மனிதன்.

REVIEW OVERVIEW
இரும்பு மனிதன் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
irumbu-manithan-movie-reviewமொத்தத்தில் இரும்பு மனிதன் வலிமையான மனிதன்.